சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான ராஜபாண்டி, சசிகுமார் மற்றும் நரேஷ் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. சிவ பிரசாத், இ.கா.ப. அவர்களின் பரிந்துரையின் பேரில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















