விருதுநகர்: விருதுநகர், காரியாபட்டி ஜமாபந்தி நிறைவு நாளில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி விசாரணையின் , மல்லாங்கிணறு பிர்காவிற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலரும், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருமான மாரிமுத்துவிடம் வழங்கினர். பொது
மக்களிடமிருந்து பெறப்பட்ட, மனுக்கள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், நிகழ்ச்சியின் போது தகுதியுடைய 14 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் மற்றும் பட்டா மாறுதல் மனு செய்திருந்த மனுதாரர்களுக்கு பட்டாவும் உடனடியாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















