கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் கண்ணண்டஅள்ளி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மத்தூர் போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரிடம் சுமார் 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவேரிப்பட்டிணம் அருகே துடுக்கானஅள்ளி பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















