திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உட்கோட்டம், திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக–ஆந்திர மாநில எல்லை கொல்லப்பள்ளி வாகன சோதனைச் சாவடியில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, (28.06.2026) தலைமை காவலர் திரு. முரளி மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர்கள் திரு. லோகேஷ்குமார், திரு. ராஜகுமாரன் ஆகியோர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநில குப்பம் பகுதியில் இருந்து தமிழகம் நோக்கி வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, பேருந்தில் பயணம் செய்த வாணியம்பாடியைச் சேர்ந்த சகாதேவன் (45). என்பவரின் பையில் இருந்த 6.190 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுடன் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார். திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.




















