கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. அனிதா அவர்கள், சனிக்கிழமை (27.06.2026) நடைபெற்ற ஊர்க்காவல் படையினரின் கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு, அவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் சேவை மனப்பான்மையை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் காவல்துறைக்கு துணைநிற்கும் பணிகளில் ஊர்க்காவல் படையினரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர். அணிவகுப்பு ஒழுங்குமுறையுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















