கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் (24.06.2026) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு விரைவான நடவடிக்கை எடுக்கும் நோக்கில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை “பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்” நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. அனிதா, அவர்கள் (24.06.2026) காலை 11.00 மணியளவில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாளை நடத்தினார்.
இந்நிகழ்வில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் புகார்கள் நேரடியாகக் கேட்கப்பட்டு, அவற்றின் மீது விரைவாகவும் திறம்படவும் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையிலான நம்பிக்கையையும் நல்லுறவையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த குறைதீர்ப்பு நாள் பயனுள்ள முறையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















