இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் பழனி பாபா மாணவர்கள் அறக்கட்டளை சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாஜூம்மா பள்ளிவாசல் முன்பு நடைபெற்றது. இதில் பழனி பாபா மாணவர்கள் அறக்கட்டளை தலைவர் நண்பா புகாரி தலைமையிலும், பழனி பாபா மாணவர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது. மலேசியா தொழில் அதிபரும் பசரியா சித்திக் மஹால் ஓனரும் ரிங் குரூப் ஆப் கம்பெனி முகமது சித்திக் அவர்கள் அம்புலன்ஸ்சை பழனி பாபா மாணவர்கள் அறக் கட்டளைக்கு அர்ப்பணித்தார். இதில் ஜமாத் தலைவர் ஹாஜா நசுருதீன் முன்னாள் ஜமாத் செயலாளர் அலி சுல்தான் மலேசியா தொழில் அதிபர்கள் நாசர், காதர், கனி, அப்பாஸ் அலி, ஹபீப், இம்தாத்துல்லா, மற்றும் ஜமாத் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள் .
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி



















