திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJHR) சார்பில், சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்கள் தலைமையில், அரசு மேல்நிலைப்பள்ளி ஆம்பூர் பெரியங்குப்பம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியில், போக்சோ (POCSO) சட்டம், காவலர் உதவி (Kavalan Udhavi) செயலியின் பயன்பாடு, சாலை பாதுகாப்பு விதிகள், பாதுகாப்பான வாகன ஓட்டம், தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.




















