மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் புனித வளனார் சமூகப் பணி மற்றும் ஆர்.சி.சிறுமலர் கிளை துவக்கப் பள்ளி இணைந்து சமூக பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மனித கடத்தல் குறித்து பொது மக்களுக்கு மனித நேய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் புனித வளனார் சமூகப் பணி மற்றும் ஆர்.சி.சிறுமலர் கிளை துவக்கப் பள்ளி இணைந்து சமூக பாதுகாப்பு, போதைப்
பொருள் ஒழிப்பு மற்றும் மனித கடத்தல் குறித்து மனித நேய விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணியை வழக்கறிஞர் குபேந்திரன், புனித வளனார் சமூகப் பணி மைய திட்ட இயக்குனர் எலிசபெத் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதில், போதைப்பொருள் ஒழிப்பு, சமூக பாதுகாப்பு, மனிதக் கடத்தல் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி பள்ளி மாணவ- மாணவிகள், சமூகப் பணி மைய பெண்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணி ஆர்.சி.சிறுமலர் கிளை துவக்கப் பள்ளியில் துவங்கிய பேரணி கவணம்பட்டி சாலை, பேரையூர் சாலை, தேனி சாலை, தேவர் சிலை என, உசிலம்பட்டி முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















