சேலம்: மேட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், “போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என்ற நோக்கத்துடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் அவர்கள் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்




















