சேலம்: சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரச மேல்நிலைப் பள்ளியில் (23.06.2026) சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஏதேனும் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றால், அரசின் இலவச உதவி எண் 1091-ஐ தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்




















