திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், சுப்பிரமணியன் தலைமையில் சாலை தெருவில் உள்ள தனியார் அலுவலகம் அருகே வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த, திருக்குறுங்குடி பகுதியை சேர்ந்த முப்பிடாதி (44). என்பவரை சோதனை செய்து பார்த்தபோது சட்ட விரோதமாக மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து காவல் ஆய்வாளர், கபீர் தாசன் விசாரணை மேற்கொண்டு முப்பிடாதியை கைது செய்து, அவரிடமிருந்து 27 மதுபாட்டில்களையும், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















