சிவகங்கை: காரைக்குடி ஸ்ரீ சரஸ்வதி ஆரம்பப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கனிம வளத்துறை அமைச்சரின் தந்தை துரை கருணாநிதி, ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் காளிமுத்து ஆகியோர் தலைமையேற்று கலந்து கொண்டனர். மேலும், மருங்கிப்பட்டி ரமேஷ் மற்றும் கிட் கிம் கல்லூரி நிறுவனர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு, கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்வில் தவெக நிர்வாகிகள் சுரேஷ், நேதாஜி சிவா, மகாலிங்கம், ராஜா முகமது, கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர். இந்நிகழ்ச்சி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதுடன், கல்வி வளர்ச்சிக்கான சமூகப் பங்களிப்பின் அவசியத்தையும் எடுத்துக்காட்டியது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















