திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியில் இருந்து அ.சாத்தான்குளம் வழியாக திருநெல்வேலிக்கு அரசு நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இதில், பயணம் செய்துவரும் கல்லூரி மாணவியை அரசுப் பேருந்து நடத்துனர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்ததால், மாணவியின் பெற்றோர் நான்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து நடத்துனர் கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரைச் சேர்ந்த குமாரசாமியிடம் (55). விசாரணை நடத்தி கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















