சேலம்: சேலம் மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு. சு. குத்தாலிங்கம் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பின்னர், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்துதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார். காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்




















