கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் மார்க்கெட் அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் குற்றவாளியிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 20,000/- மதிப்பிலான போதை பொருள் இருந்தது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள் வைத்திருந்த குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து வாகனத்துடன் போதைப் பொருளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















