சேலம்: சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நோக்கில் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை நேரில் பரிசீலித்து விசாரணை நடத்தினார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்




















