திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது காவல் நிலையத்தின் நிர்வாக செயல்பாடுகள், பதிவேடுகள் பராமரிப்பு, வழக்கு விசாரணை முன்னேற்றம் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், காவல் நிலைய வளாகத்தின் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து காவல்துறையினருக்கு தேவையான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொண்டு, அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இந்த ஆய்வின் மூலம் காவல் நிலைய செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















