திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., உத்தரவுப்படி, ஜாதிய பிரச்சனைகள் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரப்படுகிறது. மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் 2026-ம் வருடத்தில் இதுவரை பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில், சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் விதமாக பதிவு செய்து செய்தி பரப்பியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 52 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



















