சேலம்: கெங்கவல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சிங்கப்பெண் அதிரடிப்படையினர் மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, இணையவழி குற்றத் தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு தொடர்பாக சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்ச்சியில், மாணவிகள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிமுறைகள், சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்தும் நடைமுறைகள், இணையவழி மோசடிகளைத் தவிர்ப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டப் பாதுகாப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், அவசர கால உதவி எண்கள் மற்றும் குற்றச்செயல்களை எதிர்கொள்ளும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, தங்களது சந்தேகங்களுக்கு விளக்கங்களைப் பெற்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் பயனுள்ளதாக அமைந்தது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்




















