திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சுக்கமநாயக்கன்பட்டியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து பழனி தாலுகா காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















