கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது ஊத்தங்கரை- திருவண்ணாமலை ரோடு, வெள்ளக் குட்டை காவல் சோதனை சாவடி அருகே சட்டவிரோதமாக உரிமம் இன்றி வெடி பொருட்கள் கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்ததில் சட்டவிரோதமாக உரிமம் இன்றி கொண்டு சென்ற வெடிபொருட்கள் இருந்தது. சட்டவிரோதமாக வெடிபொருட்கள் கொண்டு சென்ற இரண்டு குற்றவாளிகளையும் கைது செய்து, அவர்களிடமிருந்து வாகனத்துடன் , வெடிபொருட்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து இரண்டு குற்றவாளிகளையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















