திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் அமைந்துள்ள தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் தொல்லை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சின்னாளப்பட்டி காவல் ஆய்வாளர் சுபத்ரா கலந்து கொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர், பெண் குழந்தைகள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்வது, பாலியல் தொல்லைகளைக் கண்டறிவது, அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் நேர்ந்தால் உடனடியாக பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், மாணவிகள் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும், அறிமுகமில்லாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் கலந்லந்து கொண்ட மாணவிகள் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றதுடன், பாதுகாப்பு குறித்த முக்கிய ஆலோசனைகளையும் அறிந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















