கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவசர காலங்களில் உடனடி உதவி பெறும் வழிமுறைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் “சிங்கப்பெண் அதிரடிப்படை” காவல்துறையினர் மாணவிகளுடன் கலந்துரையாடி, பெண்கள் பாதுகாப்பு, இணையவழி குற்றங்கள், அவசர உதவி எண்கள் மற்றும் சட்ட விழிப்புணர்வு தொடர்பான தகவல்களை வழங்கினர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















