கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா தலைமையில் குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் பதிவான முக்கிய குற்ற வழக்குகளின் நிலை, விசாரணை முன்னேற்றம் மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவல் பணிகளை மேலும் தீவிரப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா ஆலோசனைகள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் காவல் அதிகாரிகள் மற்றும் பல்வேறு பிரிவு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















