கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்,கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் (01.08.2026) கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.G. S. அனிதா அவர்கள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கான பதவி உயர்வு தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின்போது, ஊர்க்காவல் படையினரின் அலங்கார அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு மரியாதையைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. வேலுமணி(தலைமையிடம்), ஊர்க்காவல் படையின் மண்டல தளபதி, கோட்ட தளபதி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.




















