கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது பாப்பாரப்பட்டி, இரயில்வே காலணியில் உள்ள குற்றவாளியின் வீட்டில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சென்று சோதனை செய்த போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கிலோ 350 கிராம் கஞ்சா இருந்தது. சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த இரண்டு குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து இரண்டு குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















