விருதுநகர்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) மகேஷ் குமார் அகர்வால் அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) கௌதம் கோயல் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர நடை ரோந்து (Foot Patrol) பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், குற்றச் சம்பவங்களைத் தடுத்தல் மற்றும் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ரோந்து பணியின் போது, மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
மேலும், பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி அவர்களின் குறைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கருத்துக்களையும் கேட்டறிந்தனர். குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் இதுபோன்ற நடை ரோந்து பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.




















