விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், வெளிமாநிலத்திலிருந்து விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.




















