கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் எதிரே கர்நாடக முதலமைச்சர் டி கே சிவக்குமார், மேகதாட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சித்து வரும் நிலையில், காவேரி நீர் பங்கீடு தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி, கர்நாடக அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தளி சட்டமன்ற உறுப்பினர் டி இராமச்சந்திரன் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துடன் கூடிய நடைபயணம், காலை 11 மணி அளவில் ஓசூர் பேருந்து நிலையம் அருகே துவங்கி நடைபெற்றது. இதில் ஏராளமான சி பி ஐ கட்சியை சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S அனிதா அவர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக 300 க்கு மேற்பட்ட காவல்துறையினர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு எந்த ஒரு பாதிப்பில்லாமல் கண்டன ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது .
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















