கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற தொடர் திருட்டு வழக்குகளை கண்டறிய, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், தேன்கனிக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில், தலைமைக் காவலர்கள் ரஞ்சித் குமார், விஷ்வா, ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்ற தனிப்படை, தீவிர விசாரணை மேற்கொண்டு சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சுரேஷ் @ கன் சுரேஷ் (32).வேலம்பட்டி கிராமம், போச்சம்பள்ளி தாலுகாவைச் சேர்ந்தவரை கைது செய்தது.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 50 கிராம் தங்க நகைகள், ரூ.2.50 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் பல்சர் கருப்பு நிற இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். தொடர் திருட்டு வழக்குகளை விரைவாகக் கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்து திருடுபோன பொருட்களை மீட்ட தனிப்படை காவலர்களை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா, இ.கா.ப., பாராட்டினார்.



















