திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி (63). அவரது மனைவி சுப்பம்மாள் (54). ஆகியோர் கஞ்சா பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், நான்குநேரி காவல் ஆய்வாளர், ராஜாராம் அளித்த அறிக்கையின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஸ் பா.சாஸ்திரி, இ.கா.ப., பரிந்துரையை ஏற்று அத்தம்பதியை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவிட்டார். அதன்படி, சுப்பம்மாள் மதுரை பெண்கள் தனிச்சிறையிலும், பழனி பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் (10.07.2026) அன்று அடைக்கப்பட்டனர். இம்மாவட்டத்தில், நிகழாண்டில் 72 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















