திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லையில் உள்ள கொல்லப்பள்ளி தமிழ்நாடு–ஆந்திரப் பிரதேச மாநில எல்லை சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையின்போது, தடைசெய்யப்பட்ட குட்கா (ஹான்ஸ்) புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திரப் பிரதேசம் குப்பத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 200 கிராம் குட்காவை போலீசார் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக வாணியம்பாடியைச் சேர்ந்த இனாயத்துல்லா (47). காலித் (34). ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கடத்தலைத் தடுத்து நடவடிக்கை எடுத்த தலைமைக் காவலர் பெருமாள், தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் இம்ரான் மற்றும் ராஜகுமரன் ஆகியோரை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., பாராட்டினார்.




















