மதுரை: திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கலைக் கல்லூரியில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு சுமார் 700 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர், தனது கல்வி வாழ்க்கை, கிராமப்புற பின்னணி மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மேலும், முன்னாள் முதல்வர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை நினைவுகூர்ந்தும் உரையாற்றினார்.
விழா முடிந்த பின் செய்தியாளர்கள் பேட்டிக்காக அணுகியபோது, பட்டமளிப்பு அங்கி (கௌன்) அணிந்திருப்பதால் பேட்டி அளிக்க முடியாது என தெரிவித்த அமைச்சர், அங்கியை கழட்டிவிட்டு வருவதாக கூறி உணவருந்தச் சென்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் காத்திருந்த நிலையில், அமைச்சர் பின்வாசல் வழியாக வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. மேலும், பாஜக மாநிலத் தலைவர் நைனா நரேந்திரன் ஆளுநரிடம் புகார் அளித்திருந்த சூழலில், அமைச்சர் செய்தியாளர் சந்திப்பை தவிர்த்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















