கன்னியாகுமரி: மாவட்ட ஆட்சியர் ஆகிய நான்,ஹெல்மெட் அணியாமல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றாலும் அபராதம் விதிக்கக்கூடிய அளவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்,யாராக இருந்தாலும் சாலை விதிகளை மீறினால் அவர்களுக்கு அபராதம் -இது அரசின் வருவாயாக இல்லை,தனி மனித உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்,நினைத்து தனது பணியை செய்து வருகிறார் மேலும் சட்ட ஒழுங்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக உள்ளது,அதனால் தான் மாவட்ட நிர்வாகம் தனது வேலையை சிறப்பாக செய்ய முடிகிறது,எனவே தான் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் சிறந்த மாவட்ட எஸ்பி என்று பதக்கம் வழங்கியுள்ளார்.
என நாகர்கோவிலில் செய்தித்துறை மற்றும் நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அவர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில்” மாவட்ட ஆட்சியர் பிரதாப் எஸ் பி.ஸ்டாலின் அவர்களை பாராட்டி பேச்சு மேலும் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதுமாக 15 இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் அமைக்க இருப்பதாகவும் தகவல்-முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர். ராஜேஷ்குமார் அவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த மாவட்ட எஸ்பி ஆக தேர்வாகிய ஸ்டாலின் அவர்களை கௌரவித்து பாராட்டி விருது வழங்கினார், அதேபோன்று சிறப்பாக பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்களையும் பாராட்டி கௌரவித்தார்.




















