கன்னியாகுமரி: நாகர்கோவில் ஸ்காட் பள்ளி அருகில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஏஜென்சியில் நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்து சுமார் 50 கிலோ காப்பரை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஏஜென்சி நிர்வாகம் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வடசேரி காவல் ஆய்வாளர் மோகன் ஐயர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் நோக்கில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு (CCTV) கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















