கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி, போக்குவரத்து போலீசார் மற்றும் Road Safety Club மாணவ, மாணவியர்களுடன் இணைந்து பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவதன் அவசியம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதின் முக்கியத்துவம், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள், மது அருந்தி வாகனம் இயக்குவதால் ஏற்படும் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
சாலை விதிகளை மதித்து செயல்பட்டால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை பெருமளவில் தடுக்க முடியும் என்பதையும் மாணவர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். மாணவர்கள் நேரடியாக சமூக விழிப்புணர்வு பணிகளில் பங்கேற்பது, எதிர்காலத்தில் போக்குவரத்து விதிகளை மதிக்கும் பொறுப்பான சமுதாயத்தை உருவாக்குவதற்கான முக்கியமான முன்னெடுப்பாகும். காவல்துறை மற்றும் மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.




















