திண்டுக்கல்: திண்டுக்கல், சாணார்பட்டி அருகே பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் படி தனிப்படை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது k.அய்யாபட்டி பகுதியில் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய ராசு, ராம்குமார், திருப்பதிராஜா, அழகர், வைரமுத்து, ஆண்டிச்சாமி, முகமது ரபிக் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ 11 ஆயிரம் பணம், 5 டூவீலர்கள், 7 செல்போன்கள், சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















