கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகளின் பலனாக, மாவட்டத்தில் சட்டவிரோத கனிம வளக் கடத்தலுக்கு எதிரான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, மார்த்தாண்டம் மற்றும் தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சங்கர் கணேஷ் மற்றும் திரு.பார்த்திபன் ஆகியோர் மேற்பார்வையில் நடந்த சோதனையில் குலசேகரம் மற்றும் களியக்காவிளை காவல் நிலைய எல்லைகளில் ஆவணங்கள் இன்றி மணல் கடத்திய முழுகோடு பகுதியை சேர்ந்த ஜெபமணி என்பவரின் மகன் எட்வின் (51). அருமனை பகுதியை சேர்ந்த அச்சுதன் என்பவரின் மகன் சசிகுமார் (45). மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்த பப்பு குட்டி என்பவரின் மகன் சதீஷ் (48). மணியன்குழி பகுதியை சேர்ந்த அபூபக்கர் என்பவரின் மகன் பீர் முகமது (40).குலப்புரம் பகுதியை சேர்ந்த நேசமணி என்பவரின் மகன் ஸ்டாலின் (45). ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 4 கனிம வள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது எந்தவித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கிறது.



















