கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS., தலைமையில் தலைக்கவச விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். வடசேரி முதல் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற்ற பேரணி மீண்டும் வடசேரியில் நிறைவடைந்தது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















