கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அக்கொண்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்ததில் சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெளிமாநில மதுபானங்கள் இருந்தது. வெளிமாநில மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்து வெளிமாநில மதுபானங்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















