கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அகரம் பேருந்து நிறுத்தம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து வாகனத்துடன் 130 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















