- கன்னியாகுமரி : தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற ஐஏஎஸ்–ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில், குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், சட்டம்-ஒழுங்கை திறம்பட பராமரித்தல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த காவல் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஸ்டாலினுக்கு முதல்வர் ஜோசப் விஜய் சிறப்பு விருதை வழங்கி பாராட்டினார்.
- இந்த விருது, கன்னியாகுமரி மாவட்டத்தில் திறமையான காவல் நிர்வாகம் மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்கான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.




















