நாமக்கல்: நாமக்கல்லில் மாயமானதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை காவல்துறையினர் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டனர். விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுஷ்ராஜ் மற்றும் ரோனாக்குமார் ஆகிய இரண்டு சிறுவர்களையும் தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் 2 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டனர். பின்னர், மீட்கப்பட்ட இரு சிறுவர்களும் அவர்களது பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினரின் துரிதமான மற்றும் சிறப்பான நடவடிக்கையை பாராட்டி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறையினருக்கு வெகுவாக பாராட்டு தெரிவித்தார்.




















