கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற கோயில் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக, மாவட்ட காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G.S. அனிதா அவர்களின் உத்தரவின்பேரில், தேன்கனிக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு .ஆனந்தராஜ் அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் திருமதி. சாவித்திரி அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன், தலைமை காவலர்கள் ரஞ்சித் குமார், விஷ்வா, ஸ்டாலின் உள்ளிட்டோர் இடம்பெற்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் அடிப்படையில், கோயில் திருட்டு வழக்கில் தொடர்புடைய கர்நாடக மாநிலம் கனகபுரா பகுதியைச் சேர்ந்த மகேஷ் (எ) கரியன் மற்றும் உமேஷ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் தர்மபுரி மாவட்ட மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.




















