திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேல்சாணங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, அருங்காலத்துருவம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கும், மலையம்பட்டு கிராமத்தில் பொதுமக்களுக்கும் “சிங்கப்பெண் அதிரடிப்படை” சார்பில் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, நல்ல தொடுதல்–தவறான தொடுதல் (Good Touch – Bad Touch), போக்சோ சட்டம், இணையவழி குற்றங்கள் மற்றும் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது, போதைப்பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு விதிகள், குழந்தைகள் உதவி எண் *1098, அவசரகால காவல்துறை உதவி எண் **100*, பெண்கள் உதவி சேவைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.




















