இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவதற்காக மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த செல்வகளஞ்சியம் மற்றும் கணேசன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















