திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அணைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (எ) விக்னேஸ்வரன் என்றும் அவர் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருப்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















