திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து, (30.06.2026) பணி ஓய்வு பெறும் மாவட்ட குற்றப்பிரிவு–II உதவி ஆய்வாளர் திரு. எம். ஈஸ்வரன் மற்றும் குரிசிலாப்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. எஸ். கார்த்திகேயன் ஆகியோரை, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஆர். ரவீந்திரன் அவர்கள் நேரில் வாழ்த்தி, பொன்னாடை அணிவித்து, பணி நிறைவு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.




















