தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் ராஜா (30). என்பவர் கைது செய்யப்பட்டார். சோதனையின்போது, அவரிடமிருந்து 1 கிலோ 25 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, மகேஷ் ராஜா மீது போதைப்பொருள் மற்றும் மனநலப் பொருட்கள் தடுப்புச் சட்டம் (NDPS Act) கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் பிற சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், 100 அல்லது 95141 44100 என்ற அவசர உதவி எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், Drug Free Tamil Nadu செயலி (App) மூலமாகவும் ரகசியமாக தகவல்களை தெரிவிக்கலாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.




















